52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
இலங்கை சிறையில் கைதிகள் மோதல்: 25 பேர் பலி, 100 பேர் காயம்- போதைப் பொருள் விஷயத்தில் வெடித்த பிரச்சினை

வெளிய சண்ட போட்டுக்கிட்டு தான் ஜெயிலுக்கு போறாங்க. ஜெயிலுக்கு போயும் சண்டையா? என்று கேட்கும் வகையில் இலங்கையில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள நகரம் நெகோம்போ. தலைநகர் கொழும்புவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. உடனடியாக ஒடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அதன்பிறகு இன்று காலையும் மோதல் ஏற்பட்டு விபரீதமாகி இருக்கிறது. சிறைக்குள் இருந்த போலீசாரின் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு ஓடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நெகோம்போ சிறை கைதிகள் 25 பேர் பலி

  • வரவழைக்கப்பட்டு சிறை மோதலை ஒடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • இதுவரை மோதலில் 25 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
  • நெகோம்போ சிறையை பொறுத்தவரை அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த மோதலுக்கு என்ன காரணம் என்று ஆராய்கையில், சிறைக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருவதற்கு ஒரு குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றொரு குழு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
  • இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் கடைசியில் உயிர் பலியாகும் வகையில் விபரீதத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது.

இலங்கையில் மோதலை ஒடுக்கிய சிறப்பு அதிரடி படை

இதையடுத்து சிறப்பு அதிரடி படை, ரானுவம் வரவழைக்கப்பட்டு மோதலை ஒடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சில கைதிகளை பல்லன்சேனா சிறைக்குள் மாற்றம் செய்துள்ளனர். இதுபற்றி சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் ஏ. சி. கஜநாயகே கூறுகையில், சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பத்திரிகையாளர் தாசுனி அதவுடா தகவல்

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு நீதித்துறை அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா உத்தரவு பிறப்பித்துள்ளார். நெகோம்போ தொடர்பாக இலங்கை செய்தியாளர் தாசுனி அதவுடா தனது பதிவில், கடந்த 2 நாட்கள் தான் கலவரம் நடந்திருக்கிறது என்று டைம்லைன் போட்டு சம்பவத்தை விளக்கியிருக்கிறார்.

இலங்கை சிறையில் நடந்தது என்ன?

ஜூலை 5, ஞாயிறு பிற்பகல் விவகாரத்தால் வெடித்தது மோதல் (2 பேர் பலி, 34 பேர் காயம்)
ஜூலை 5, ஞாயிறு மாலை சிறையின் மேற்கூரையில் ஏறி கைதிகள் போராட்டம், மேற்கூரை சரிந்து விழுந்தது (4 பேர் காயம்)
ஜூலை 5, ஞாயிறு இரவு ஆயுதக் கிடங்கு கைப்பற்றப்பட்டது; கலவரத்தை அதிரடிப்படை ஒடுக்கியது
ஜூலை 6, திங்கள் காலை சிறையில் உள்ள மருத்துவமனையில் கைதிகள் அத்துமீறினர். கதவுகளை உடைத்து தகர்த்தனர்
ஜூலை 6, திங்கள் பிற்பகல் கைதிகள் தப்பி செல்லாத வகையில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். (25 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்)

நெகோம்போ சிறை அதிகாரிகள் காயம்

இலங்கையில் உள்ள நெகோம்போ சிறையில் கைதிகளுக்கு இடையில் நடந்த மோதலில் சிறைத்துறை அதிகாரிகளும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் உள்ள கதவுகளை அடைத்துக் கொண்டு கைதிகள் வெளியேறாத வகையில் முயற்சி செய்தனர். ஆனால் பெரும் கூட்டமாக கைதிகள் ஓடிவந்து தாக்கியதால் தடுக்க முடியவில்லை. இறுதியில் கதவுகளை உடைத்து கொண்டு சிதறி ஓடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *