இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தப் பிறகு, வீரர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீரர்களிடம், திறமையை மட்டும் எதிர்பார்க்காமல், சீனியர், ஜூனியர் பாகுபாடு பார்ப்பது, தனக்கு பிடித்த வீரர் சொதப்பினாலும், தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் கொடுப்பது போன்ற விஷயங்களை, கம்பீர் செய்து வருகிறார்.இதனாலே, இந்திய கிரிக்கெட் வரலாற்றில், வேறு எந்த பயிற்சியாளருக்கும் இல்லாத எதிர்ப்பு குரல், கம்பீருக்கு எதிராக அதிகமாகவே ஒலிக்கிறது.இந்நிலையில், இங்கிலாந்து டி20 தொடரில், கம்பீர் செய்துள்ள செயல், சஞ்சு சாம்சனை கொந்தளிக்க செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற, டி20 உலகக் கோப்பையை வெல்ல முழு முதற்காரணமாக இருந்த சஞ்சு சாம்சனை, இங்கிலாந்து டி20 தொடரில், கம்பீர் ஓரங்கட்டியுள்ளார்.குறிப்பாக, திலக் வர்மா, இஷான் கிஷன் ஆகியோர் டி20 உலகக் கோப்பை 2026, அயர்லாந்து தொடர்களில் சொதப்பியபோதும், சாம்சனை மட்டும் திட்டமிட்டு ஓரங்கட்டியிருப்பது, சாம்சனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதனால், பிசிசிஐ நிர்வாகிகளை தொடர்புகொண்டு, தனது அதிருப்தியை சாம்சன் வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘‘எனது இடத்தை நிரந்தரம் செய்ய, இன்னமும் நான் என்ன செய்ய வேண்டும். டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய எனக்கு, ஏன் இன்னமும் இடத்தை நிரந்தரம் செய்யவில்லை. கம்பீர் திட்டமிட்டு என்னை ஓரங்கட்டுவதாக நான் கருதுகிறேன். டி20 உலகக் கோப்பை 2028 தொடரில் விளையாடுவதுதான் எனது இலக்கு’’‘‘ஒரு போட்டியில் சொதப்பியதும், எனது விக்கெட் கீப்பர் இடத்தை, கம்பீர் பறித்தார். தற்போது, வைபவ் சூர்யவன்ஷிக்காக எனது இடத்தை பறித்துள்ளார்கள். மற்ற வீரர்களுக்கு, இதுபோல் நடப்பதில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். இதற்கான நியாயத்தை, பிசிசிஐ வழங்க வேண்டும். இல்லையென்றால், ரசிகர்களிடம் நியாயம் கேட்கும் சூழல் வரும்’’ என பிசிசிஐ நிர்வாகிகளிடம் சாம்சன், அதிருப்தியுடன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.திலக் வர்மா தொடர்ச்சியாக குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய நிலையில், அவருத்து தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இஷான் கிஷனும், சமீப காலமாகவே அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும், இந்திய டி20 அணியின், மிடில் வரிசை பலமில்லாமல் இருக்கிறது. தற்போதைக்கு, அபிஷேக் சர்மா மட்டுமே தொடர்ச்சியாக அபாரமாக விளையாடுகிறார்.மற்ற அனைவரும் சொதப்பும் நிலையில், டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சாம்சன் இடத்தை மட்டும் ஏன் இன்னமும் நிரந்தரம் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.கம்பீருக்கு தோனி, விராட் கோலி ஆகிய இரண்டு வீரர்களையும் பிடிக்காது என்ற கருத்தும் இருக்கிறது. இதனால்தான், ஆர்சிபி, சிஎஸ்கே வீரர்களை கம்பீர் தவிர்க்கிறாதோ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கூட, ஷிவம் துபேவுக்கு போட்டியாக சூர்யான்ஸ் செட்ஜ் என்ற ஆல்ரவுண்டரை கம்பீர் அணிக்குள் கொண்டு வந்துள்ளார். இப்படி, இந்திய அணிக்குள் கம்பீர் ஏன் தேவையில்லாத வேலையை பார்க்க வேண்டும், பிசிசிஐ ஏன் இதுகுறித்து கம்பீரிடம் எதுவும் கேட்பதில்லை என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில், சாம்சன் தற்போது மறைமுக மிரட்டல் விடுத்துள்ள நிலையில், விரைவில், கம்பீரிடம் இந்த புகார் குறித்து பிசிசிஐ அறிக்கை கேட்கும் எனக் கருதப்படுகிறது.

