ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, கிராமப்புறக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வியை வழங்கும் தனது 'கலைவாணி கல்வி மையம்' பள்ளிக்கு விரைவாகவும் லஞ்சமின்றியும் அனுமதி கிடைத்துள்ளது.தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்திற்கும், மாற்றத்திற்கும் காரணமாக இருந்த முதலமைச்சர் விஜய்க்கு தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து இருக்கிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு பள்ளிக் கல்வித்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றமே காரணம். அது குறித்து பார்ப்போம்.ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில், தென்காசி மாவட்டத்தில் தான் தங்கி பணியாற்றி வரும் பகுதியில் கோவிந்தபேரி என்ற கிராமத்தில் 'கலைவாணி கல்வி மையம்' என்ற கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்கும் கிராமப்புற பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு முந்தை அரசிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது. அது இலவசமாக இயங்கும் பள்ளியாக இருந்தாலும் கூட அனுமதி வழங்க குறிப்பிட்ட அளவு தொகை கேட்கப்பட்டது.மேலும், அதுதான் ஒரே வழி என்றும் சொல்லப்பட்டது. ஆனால், முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தந்தும், அனுமதி விரைவாகவும் தானாகவும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான முன்னேற்றத்தையும், நல்ல மாற்றத்தையும் பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும், இந்த மாற்றத்தை கொண்டுவந்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றியையும் கூறியிருந்தார். தற்போது, அவருடைய அந்த பதிவு மிகப் பெரிய அளவில் வைராலனது.அதில், ஒரு மாதத்தில் ஊழல் விவகாரத்தில் தவெக அரசு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. தற்போது லஞ்சம் இல்லாமல் நிலப் பதிவுகள், ஒப்புதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், கிராமப்புறக் குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்க விரும்பியபோது, என் நண்பருக்கும் இதேதான் நடந்தது என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக முந்தைய ஆட்சியில் ஊழல் கதை தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையில் இம்மாபெரும் மாற்றம் நிகழ சமீபத்தில் அமைச்சர் ராஜ்மோகன் போட்ட முக்கிய உத்தரவே முக்கியமான காரணம். அதாவது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்ற வாரத்தில், இனி தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் (Recognition), புதுப்பித்தல் (Renewal) மற்றும் தடையில்லாச் சான்று (NOC) பெறுவதற்கு அரசியல் செல்வாக்கோ, பணப் பலமோ செல்லுபடியாகாது.தகுதி இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள் அங்கீகாரம், புதுப்பித்தல் சான்றிதழ் பெறுவதற்கு யாருக்கும் ஒரு ரூபாய் கூட வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி யாராவது லஞ்சம் கேட்டாலும் நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்து இருந்தார். இப்படியான சூழ்நிலையில் மற்றொரு மாபெரும் உத்தரவையும் பிறப்பித்து உள்ளார்.அந்த உத்தரவில், 01 ஜூலை 2026 முதல் தனியார் பள்ளிகளுக்கான அனைத்து அனுமதிச் செயல்பாடுகளும் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்படுகின்றன. இதையடுத்து, தனியார் பள்ளிகள் அனைத்து சான்றிதழ்களுக்கும் ஒப்புதல்களுக்கும் இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தால் மட்டுமே ஏற்கப்படும் என்ற தெரிவித்துவிக்கப்பட்டு உள்ளது.

